2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மேய்ச்சல் தரவையை அபிவிருத்தி செய்யுமாறு கோரிக்கை

Kogilavani   / 2016 செப்டெம்பர் 19 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி பூநகரி செம்மங்குன்றில் மேய்ச்சல் தரவைக்கான நிலம் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவ்மேய்ச்சல் தரவையை அபிவிருத்திச் செய்யுமாறு கால்நடை வளர்ப்பாளர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

செம்மங்குன்றில் 250 ஏக்கர் வரையான நிலப்பரப்பு மேய்ச்சல் தரவைக்கென அடையாளப்படுத்தப்பட்டுள்ளப் போதிலும் இம் மேய்ச்சல் தரவைக்கான வேலி அமைத்தல், புற்களை வளர்த்தல் உட்பட பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க வேண்டியுள்ளதாகவும் இதற்கான முயற்சிகளை அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 1ஆம் திகதி பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது.

பூநகரியில் பெருமளவு கால்நடைகள் உள்ளப் போதிலும் மேய்ச்சல் தரவைக்கு பொருத்தமான இடமில்லை. இங்குள்ள நிலங்கள் உவர் நிலங்களாக மாறி வருவதாலும் வரட்சி நிலைமை அதிகம் காணப்படுவதாலும் பூநகரி செம்மங்குன்று நீர்வளம் உள்ள பகுதி என்பதினால் மேய்ச்சல் தரவைக்கான இடமாக இனங்காணப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .