2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

மாற்றுத்திறனாளிகளுக்கு காசோலைகள் வழங்கி வைப்பு

George   / 2017 மார்ச் 31 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் 11 மாற்றுத்திறனாளிகளுக்கு காசோலைகள் வழங்கும் நிகழ்வும், தையல் அழகு கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் வெள்ளிக்கிழமை (31) நடைபெற்றது.

ஏற்கெனவே,செயற்கை கால்கள் வழங்கப்பட்ட 60 பேரில்,  11 மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தலா 25 ஆயிரம் பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டதுடன்.

தையல் மற்றும் அழகு கலை பயிற்சிகளை நிறைவு செய்த 35 பேருக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் இராணுவ ஒத்துழைப்பு மையத்தில் நடைபெற்றது.

இதில் கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜென்ரல் அஜீத் காரிய கரவன, காசோலைகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்துள்ளார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .