2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஆசனம்

George   / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் பஸ்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஆசனங்கள் ஒதுக்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.   

புதுக்குடியிருப்பு, கரைதுறைபற்று, ஒட்டுசுட்டான், துணுக்காய், மாந்தை கிழக்கு, வெலிஓயா ஆகிய பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களின்​போது விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.   

முல்லைத்தீவு மாவட்டத்தில், ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் உள்ள போதிலும், பஸ்களில் பயணம் செய்யும்போது, அவர்களுக்கான ஆசனங்கள் ஒதுக்கப்படாததன் காரணமாக, போக்குவரத்து செய்வதில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாக மாற்றுத்திறனாளிகளினால் தெரிவிக்கப்பட்டது.   

இந்நிலையிலேயே, மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ்களில் சிறப்பு ஆசனங்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .