2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ சான்றிதழ்

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ சான்றிதழ் வழங்கும் திட்டத்தை, வடமாகாண சுகாதார அமைச்சு, கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பித்துள்ளது.

முதற்கட்டமாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தினால், முழங்காவில் மாவட்ட வைத்தியசாலையில் நேற்று திங்கட்கிழமை (15) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

முழங்காவில் மாவட்ட வைத்தியசாலையைப் பயன்படுத்தும் மாற்றுத் திறனாளிகளான பொதுமக்கள் இச்சேவையில் இணைந்து மருத்துவ சான்றிதழைப் பெற முடியுமென அதிகாரிகள் தெரிவித்தனர். மாற்றுத் திறனாளிகள் மருத்துவச் சான்றிதழைப் பெறுவதன் மூலம், அரச துறையில் பொருத்தமான உதவித்திட்டங்கள் வரும் போது விண்ணப்பிக்க முடியும்.

கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழை வழங்கும் திட்டம் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதுபோல வட மாகாணத்தின் அனைத்துப் பிரதேசங்களிலும் இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .