Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
“எமது சமூகத்தில் மாற்றுவலுவுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிகரித்துள்ள மாற்றுவலுவாளர்கள் குடும்பங்கள் தமது அன்றாட ஜீவனோபாயத்துக்காக அனுபவிக்கும் அவலங்கள் அளவில்லாதவை. காலப்பணியை சுமந்ததினால்த்தான் மாற்றுவலு நிலை ஏற்பட்டிருக்கிறது” என, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாற்றுவலுவுள்ளோர் சங்கத்துக்கும் சங்கத்தினால் தெரிவு செய்யப்ப்ட்ட பயனாளிகளுக்கும் புலம்பெயர் உறவுகளின் உதவிகளை வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
“ஒரு தேசத்தின் காலப்பணியை சுமந்ததினால்த்தான் மாற்றுவலு நிலை ஏற்பட்டிருக்கிறது. நாளாந்தம் உங்களுடைய பிள்ளைகளை கற்பிப்பதற்காக சத்துள்ள உணவுகளை வழங்குவதற்காக மருத்துவச்செலவுக்காக உடைகளுக்காக என செலவுப்பட்டியல் நீண்டு செல்கிறது. எத்தனை நாளைக்கு மற்றவர்களில் தங்கிவாழலாம் என்கிற மனத்துடிப்பும் உங்களிடம் இருக்கிறது.
“எனவே, நாங்கள் நிலையான மாற்றம் தொடர்பில் சிந்திக்கவும் செயலாற்ற வேண்டியகாலம் எழுந்துள்ளது.
“உங்களுடைய அர்ப்பணிப்புகளை அர்த்தமுள்ளதாக ஆக்கக்கூடிய தீர்வொன்றைக் காணவேண்டும். உங்களுக்கும் உங்களுடைய சங்கத்துக்கும் உதவுதல் எங்களுடைய மனிதாபிமான கடமை. நீங்கள் எமது நாட்டுக்கு ஆற்றிய பணிக்கு நாங்கள் உங்களுக்கு பணிவிடைசெய்யக் கடமைப்பட்டிருக்கிறோம். சிலர் இவ்விடயங்களை அரசியலாக்கவும் முனைகிறார்கள்.
“கிளிநொச்சி நகரிலே மாற்றுவலுவுள்ளோருக்கு காணி ஒதுக்கப்பட்டபோது, முன்னைய ஆட்சியாளர்களும் அடிவருடிகளும் அதிகாரபலம் கொண்டு பறித்தார்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். இன்று டிப்போச் சந்தியிலே காணி உங்களுக்கு மீளக்கிடைத்திருக்கிறது.
“மாற்றுவலுவடைய பெண்களுக்கும் நீதிமன்றத்தினருகே காணியும் கட்டடமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. உங்களுடைய அலுவலகத்தை அமைப்பதற்கும் எமது கட்சியின் கௌரவ உறுப்பினர்களாலே 32 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்படடிருக்கிறது. அது தவிர புலம்பெயர்ந்து வாழ்கின்ற பலர் இந்த மண்ணைப் பற்றியும் மண்ணில் வாழ்ந்த வாழ்க்கை பற்றியும் தங்களோடு களமாடிய தோழர்கள் பற்றியும் நினைவுகளோடே வாழ்கிறார்கள்.
“இன்று இந்த உதவியை வழங்குகின்றவரும் புலம்பெயர்ந்து இருக்கின்றபோதும் உங்களில் ஒருவராகவே வாழ்ந்து வருகின்றார். இவை எங்களுடைய மனிதாபிமான பணிகளே தவிர அரசியல் நோக்கம் கொண்ட செயற்பாடுகள் அல்ல” என்றார்
இந்நிகழ்வில், 25 மாற்றுத்திறனாளிகளுக்கு தென்னம்பிள்ளைகள் வாழ்வாதாரமாக வழங்கப்பட்டதுடன் மேலும் ஐம்பதாயிரம் ரூபாய் சங்கத்துக்கு வழங்கப்பட்டது.
11 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago