Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 நவம்பர் 01 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு கடற்கரையில் சட்டவிரோத மணல் அகழ்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்றுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடற்கரைப்பகுதியில் மணல் அகழ்வு நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபடுவதாக மக்கள் என்னிடம் முறையிட்டனர். தகவலையடுத்து குறித்த இடத்துக்குச் சென்ற போது அங்கு யாரும் இருக்கவில்லை. எனினும், மணல் அகழ்ந்துள்ளமைக்கான அடையாளங்கள் இருந்தன.
அவை தொடர்பான அகழ்விடங்களை ஒளிப்படக்கருவியில் பதிவுசெய்ததோடு, இது தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளேன்.
இராணுவத்தினர் கடற்கரையோரங்களில் மணல் அகழ்வதை ஏற்கெனவே பல இடங்களில் நேரில் சென்று பார்த்து, எச்சரித்து நிறுத்தியுள்ளேன்.
இவ்வாறான மணல் அகழ்வுகளில் எவர் ஈடுபடினும் அதனை அனுமதிக்கமுடியாது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
7 minute ago
2 hours ago