Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
George / 2016 செப்டெம்பர் 16 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலக பிரிவுகளின் அபிவிருத்திக்குழு கூட்டங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை(19) இடம்பெறவுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவருமான டொக்டர் சிவப்பிரகாசம் சிவமோகன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 'எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டமும் காலை 11.00 மணிக்கு கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டமும் மாலை 3.00 மணிக்கு ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டமும் இடம்பெறவுள்ளன" என்றார்.
முக்கியமாக இராணுவத்தினரின் காணி சுவீகரிப்பும் அதனால், மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பாக தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.
இந்த மூன்று பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களும் கடந்த மாதம் இடம்பெறவிருந்து பிற்போடப்பட்ட நிலையில், எதிர்வரும் 19ம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago