2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

முல்லைத்தீவிலும் தபாலட்டை போராட்டம்

Kogilavani   / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

இந்திய றோலர்களை கட்டுப்படுத்த வேண்டுமென்று யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்ட தபாலட்டை அனுப்பும் போராட்டம் முல்லைத்தீவிலும் வியாழக்கிழமை (22) ஆரம்பிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களின் சங்கங்களின் சமாசத்தில், சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமாசத்தைச் சேர்ந்த 26 சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

'இந்திய றோலர்களின் நெருக்கடி தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர், மீன்பிடி அமைச்சர் ஆகியோருக்கு தபாலட்டை மூலமாக தெரியப்படுத்தியுள்ளோம். இந்திய றோலர்களின் அத்துமீறல்களைக் கண்டித்து இனிவரும் நாட்களில் மாபெரும் மக்கள் போராட்டத்தையும் நடத்தவுள்ளோம்' என இதன்போது அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .