2025 ஜூலை 05, சனிக்கிழமை

மீளாய்வு கூட்டம்

Sudharshini   / 2015 செப்டெம்பர் 19 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

வடக்கு மாகாண சபையின் கிராம அபிவிருத்தி திணைக்களத்தினூடாக மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கிராம, மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு மின்னிணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்காக ஒதுக்கப்பட்ட நிதிகளுக்கான வேலைத்திட்டங்கள் குறித்து மீளாய்வுக் கூட்டம் மன்னாரில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்றது.

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், குறித்த திட்ட மீளாய்வு கூட்டத்திற்கு சுமார் 16 சங்கங்களை சார்ந்த நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது ஒதுக்கப்பட்ட நிதிகளுக்கான வேலைத்திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுமாறு அமைச்சர் பணித்ததோடு, சங்கங்களுக்கு உள்ள தேவைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .