Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்து, கடந்து சனிக்கிழமை (13) முதல், கவனயீர்ப்புப் போராட்டதில் ஈடுபட்டுவரும் பரவிப்பாஞ்சான் கிராம மக்கள், ஐந்தாவது நாளாக புதன்கிழமையும், தமது போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இந்நிலையில், அவர்களது போராட்டத்தைக் கைவிடுமாறு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு , மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதனால், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக, போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்களுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,
'கிளிநொச்சி மாவட்ட கரைச்சிப் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள பரவிப்பாஞ்சான் கிராமத்தில் 50துக்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்து உறவினர்களுடனும் நண்பர்களுடனும் வாழ்ந்து வருவதனை நாம் அறிவோம். இவர்களுடைய காணிகளை படையினரிடம் இருந்து விடுவிப்பதற்கு, மீள்குடியேற்ற அமைச்சு எடுத்த நடவடிக்கையை அடுத்து, நான்கு ஏக்கர் காணியை விடுவித்துள்ளதாக பாதுகாப்பின் அமைச்சின் செயலாளர் எமக்கு அறிவித்துள்ளார்
மேலும் 13 ஏக்கர் காணியை விடுவிப்பது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரம் ஒன்றினை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளேன். எதிர்வரும் சில வாரங்களுக்குள் ஓர் பூரணமான தீர்வு பெறப்பட உள்ளதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பரவிப்பாஞ்சான மக்களை அதனைக் கைவிடுமாறு கேட்டுக் கொள்கின்றேன். அத்துடன், இது தொடர்பான நடவடிக்கைகளை எனது அமைச்சின் மூலம் நான் முன்னெடுப்பேன்' என அந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
எனினும், 'கடந்த சில மாதங்களுக்கு முன்னர், சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம், அதிகாரிகளின் வாக்குறுதிகளை நம்பிக் கைவிடப்பட்ட போதிலும், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. எங்கள் காணிகளில் உள்ள இராணுவத்தினரை வெளியேற்றி, எங்களை மீள்குடியேற அனுமதித்தால் மாத்திரமேயு, இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தைக் கைவிட முடியும்' என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
பரவிப்பாஞ்சானில் இராணுவத்தின் வசமிருந்து விடுவிக்கப்பட்ட சுமார் நான்கரை ஏக்கர் காணியில் இருந்து, கடந்த செவ்வாயன்று (16), இராணுவத்தினர் வெளியேறியதுடன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம், அக்காணியையும் கையளித்துள்ளனர்.
விடுவிக்கப்பட்ட காணியில் மீள்குடியேறுவதற்காக, 15 உரிமையளார்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 9 பேர், பதிவுகளை மேற்கொண்ட நிலையில், 7 பேருடைய பத்திரங்களே சரியானவையாக உள்ளதுடன், ஏனையவர்களுடைய ஆவணங்கள் ஆராயப்பட்டு இன்னும் ஓரிரு நாட்களில் கையளிக்கப்படும் என, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago