Editorial / 2023 ஒக்டோபர் 01 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
யது பாஸ்கரன்
கிளிநொச்சி பூநகரி பரமன் கிராய் பிரதேசத்தில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருமாதம் கடந்தும் பொலிஸார் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென கடத்தப்பட்ட சிறுமியின் பெற்றோர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
கிளிநொச்சி பூநகரி பரமன்கிராய் பகுதியில் தரம் பத்தில் கல்வி கற்கும் 15 வயதுடைய சிறுமி ஒருவரை கடத்திச் சென்றுள்ளதாக அவரது பெற்றோர்களால் கடந்த ஓகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி பூநகரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பொலிஸார் இதுவரையிலும் எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்காது குறித்து பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்
சிறுமி கடத்தல் சம்பவம் தொடர்பில் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டிருந்த போதும் அது தொடர்பில் இதுவரை எந்த விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் இது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் புதன்கிழமை (27) முறைப்பாடு செய்துள்ளனர்
இவ்வாறு கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் அதிகளவான சிறுவர் கடத்தல் சம்பவங்களும் பதிவாகி இருக்கின்ற போதும் இது தொடர்பில் பொலிஸார் எந்த விதத்திலும் நடவடிக்கையும் உடனடியாக எடுப்பதில்லை என பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago