Niroshini / 2022 ஜனவரி 09 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
தேர்தலுக்கு முன்னர் நாட்டு மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்திய அரசாங்கம், தற்போது அதன் மூலமே அழிந்து வருவகின்றது என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் முற்போக்கு எண்ணக்கருவாக அமைந்த அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய திறமையான இளம் தலைமுறையை உருவாக்கும் நோக்கில், வகுப்பறைகளுக்கு டிஜிட்டல் கணினி திரைகள் மற்றும் கணினி உபகரணங்கள் வழங்கும் முன்னோடித் திட்டமான 'பிரபஞ்சம்' திட்டத்தின் கீழ், மன்னார் - எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்துக்கு, நேற்று (8), வகுப்பறைகளுக்கு டிஜிட்டல் கணினி திரைகள் மற்றும் கணினி உபகரணங்கள. எதிர்க்கட்சித் தலைவரால் வழங்கி வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், தேர்தலுக்கு முன்னர் நாட்டு மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்திய அரசாங்கம், தற்போது அதன் மூலம் அழிந்து வருவகின்றது என்றார்.
இனவாதம், இன பேதம், மதவாதத்தை விதைத்தன் சாபத்தையே அரசாங்கம் இன்று அனுபவிக்கின்றது எனவும், அவர் தெரிவித்தார்.
ஊட்டச்சத்து குறைபாடும்போ சாக்கின்மையும் தலைவிரித்தாடும் நாட்டில் உள்ள குழந்தைகளின் இணையவழி கல்விக்கு தீர்வை வழங்க முடியாத அரசாங்கத்தால், ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு எவ்வாறு தீர்வை வழங்க முடியும் எனவும் அவர் கூறினார்.
"முன்னெப்போதையும் விட இந்நாட்களில் தேசிய ஊட்டச்சத்து கொள்கையின் தேவை மிகவும் உணரப்பட்டு வருகின்றது.
"ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் குறித்த கொள்கையின் தேவை நிறைவேற்றப்படும்" என அவர் மேலும் தெரிவித்தார்.
15 minute ago
22 minute ago
26 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
22 minute ago
26 minute ago
59 minute ago