2025 ஜூலை 23, புதன்கிழமை

‘மக்களுக்குத் தீமை பயக்கும் மயானங்கள் எதற்கு?’

Editorial   / 2017 ஓகஸ்ட் 07 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

புகைத்தல் புற்றுநோயை உண்டாக்கும் என ஊடகங்களில் பல்வேறு விளம்பரங்களைச் செய்து வரும் இந்த அரசாங்கத்துக்கு, மக்கள் குடிமனைக்கு மத்தியில் உள்ள மயானங்களினால் எங்களுக்குச் சுவாசம் சார்ந்த நோய் வராதா என்ற கேள்வி எழவில்லையா என, புத்தூர் கலைமதி பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குடிமனைக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்றுமாறு கோரி, புத்தூர் கலைமதி பிரதேச மக்கள் முன்னெடுத்துவரும் கவனயீர்ப்புப் போராட்டம், 27ஆவது நாளைக் கடந்து தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதேச மக்கள்,

“எங்கள் அயலைச் சுற்றி நான்கு இந்து மயானங்கள் உள்ளன. அவற்றில் கூடுதலான ஈமக் கிரியைகள் செய்யப்படுகின்றன. ஒரு சிலரின் பழமை வாதக்கருத்துகளும், சாதிய பாகுப்பாடும் புத்தூர் - கிந்துசிட்டி மயானத்தை வேண்டும் என்று நின்றனர். இந்த மயானத்தால், அடர்த்தியான குடியிருப்புக்கு மத்தியில் சுவாசம் சார்ந்த பிரச்சினைகள் உள்ளன. இதனால் சிறுவர்கள், மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனாலேயே நாம் இப் பகுதியில் உள்ள இந்து மாயனத்தை அகற்றுமாறு கோரிக்கை விடுகின்றோம். “கடந்த வாரம் மாகாண ஆளுநர் வருகை தந்திருந்தார். மயானத்தை அகற்றுவது தொடர்பில், தான் உயர்அதிகாரிகளுடன் கதைத்து நிறைவேற்றுவதாகக் கூறி சென்றிருந்தார். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு உரிய நடவடிக்கையை எடுக்கத்தவறும் பட்சத்தில், மாகாணசபைக்கு முன்னால் நாம் தொடர் போராட்டத்தை முன்னெக்கவுள்ளோம்” என அம்மக்கள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .