2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து தற்காலிகமாக இரண்டு வைத்தியர்கள் நியமனம்

Editorial   / 2020 ஜனவரி 30 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

 

மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரனால் தற்காலிகமாக இரண்டு வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு வைத்தியர்களை நியமிக்கக் கோரி, நேற்று (29), மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு வருகைதந்த வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன்,  ஏற்கெனவே பிரதியீடு இல்லாமல் இடமாற்றம் செய்யப்பட்ட வைத்தியர் உடனடியாக மீள நியமிக்கபடுவார் என்றும் 24 மணித்தியால சேவையை வழங்கும் வகையில் மேலுமொரு வைத்தியர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையிலிருந்து வரவழைக்கப்பட்டு நியமிக்கப்படுவார் என்றும் உறுதியளித்தார்.

அத்துடன், பெப்ரவரி மாதம், நிரந்தர வைத்தியர்கள் நியமனம் இடம்பெறுமெனத் தெரிவித்த அவர், குறித்த பிரதேச வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி குறித்து ஆராயும் முகமாக வைத்தியசாலை அபிவிருத்திக் குழு ஒன்றும் அமைக்கப்படுமெனவும் கூறினார்.

இதையடுத்தே, குறித்த வைத்தியசாலைக்கு, தற்காலிகமாக இரண்டு வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .