Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2016 செப்டெம்பர் 09 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, பூநகரி, மட்டுவில்நாடு கிராமத்தில், இராணுவம் மற்றும் பொலிஸார் வசமுள்ள தமது காணிகளை விடுவித்து, அவற்றில் தங்களை மீள்குடியேற்றுமாறு 18 குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்;ளன.
பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள மட்டுவில்நாடு கிழக்கு கிராம அலுவலர் பிரிவில், அதிகளவான காணிகள் இராணுவத்தினர் வசமுள்ளன.
தங்களது காணிகள் இராணுவத்தினர் வசமுள்ளதால், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக உறவினர், நண்பர் வீடுகளில் தாங்கள் வாழ்ந்து வருவதாகவும், தங்களை தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றுமாறு கோரி, 7 குடும்பங்கள் தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோன்று மட்டுவில்நாடு மேற்கு பகுதியில், 11 பேருக்குச் சொந்தமான காணிகள், அவற்றுள் காணப்படும் வீடுகள் பொலிஸாரின் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இதில் நான்கு குடும்பங்கள், தங்களை உடனடியாக மீள்குடியேற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
40 minute ago