2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’மடுக்கரை வீதியில் அமைக்கப்பட்ட பாலம் தரமாக சீரமைக்கப்படும்’

Niroshini   / 2021 டிசெம்பர் 02 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-றொசேரியன் லெம்பேட்

மன்னார் - நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில், மடுக்கரை வீதியில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த பாலம், மீண்டும் உரிய முறையில் மறு சீரமைக்கப்படும் என, வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணத் திட்டப் பணிப்பாளர் ஜெகநாதன் உறுதியளித்துள்ளார்.

நேற்று  (01), வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் வடக்கு மாகாணத் திட்டப் பணிப்பாளர்  ஜெகநாதன்  மற்றும் நானாட்டான் பிரதேச செயலாளர்    எஸ்.கிரிஸ் கந்தகுமார் தலைமையிலான குழுவினர், குறித்த பாலத்தை பார்வையிட்டதோடு, பாலத்தின் நிலை குறித்தும் ஆராய்ந்துள்ளனர்.

இதன் போது, குறித்த பாலம், தரமற்ற முறையில் அமைக்கப்பட்டு இருப்பதை, குறித்த குழுவினர் உறுதி செய்தனர்.

இந்தப் பாலத்தில் மேற்கொண்டு செய்யப்பட வேண்டிய வேலைகளுக்கு, இது பொருத்தமில்லாத மழைக் காலமாக இருக்கின்றனது. இதனால், தற்காலிகமாக மக்கள் போக்குவரத்துக்கு ஏதுவாக, அபிவிருத்தி பணியை விரைவாக முடித்து கொடுத்து, எதிர்வரும் வருடம் இந்தப் பாலத்தை உரிய முறையில் தரமாக சீரமைப்பதாக, வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் திட்டப் பணிப்பாளர் உறுதியளித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .