2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மணல் அகழ்ந்தவர்களுக்கு ரூ. 180,000 அபராதம்

George   / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, இயக்கச்சிப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு பேருக்கு 1 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, புதன்கிழமை (28) தீர்ப்பளித்தார்.

அத்துடன், குறித்த இரண்டு பேரையும் 14 நாட்கள் சமூக சேவையில் ஈடுபடுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

சட்டவிரோதமாக மணல் அகழ்ந்துகொண்டிருந்த குறித்த இருவரையும் பளை பொலிஸார் செவ்வாய்க்கிழமை (27) கைதுசெய்து, நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்ப்படுத்தினர். இதன்போது இருவரும் தமது குற்றத்தை ஏற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து, கால் பாதிக்கப்பட்ட நபருக்கு 80 ஆயிரம் ரூபாயும், மற்றைய நபருக்கு 1 இலட்சம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .