2025 ஜூலை 05, சனிக்கிழமை

மணலேற்றிய 5 டிப்பர்கள் சிக்கின

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 07 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில், பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு என வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தைப் பயன்படுத்தி, வட்டக்கச்சியிலிருந்து மணல் ஏற்றிச் சென்ற இரு டிப்பர்களும் வழி அனுமதிபத்திரத்தில் குறிப்பிடப்பட்டதுக்கு எதிராக, வாகனம் செலுத்தியமைக்காக மற்றுமொரு டிப்பர் வாகனமும், அனுமதிபத்திரத்தில் வழி சரியான முறையில் குறிப்பிடப்படாமையால் ஏனைய இரு டிப்பர்களுமே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

சனிக்கிழமை (06) கைது செய்யப்பட்ட மேற்படி சாரதிகளை, அவர்களின் வாகனங்கள் சகிதம்,  கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் திங்கட்கிழமை (08) ஆஜர்படுத்தவுள்ளதாக  பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .