Editorial / 2018 ஒக்டோபர் 03 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு, துணுக்காய், பழையமுறிகண்டிக் கிராமத்தில் தொடர்ச்சியாக நடைபெறுகின்ற மணல் அகழ்வு காரணமாக, கிராமத்துக்கான முதன்மை வீதி சேதமடைந்து காணப்படுவதாக கிராம மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 8 ஆண்டுகளாக பழையமுறிகண்டிக்குளத்தின் ஆற்றுப்படுகைகள், குளத்தின் பின்பகுதி என்பவற்றில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு நடைபெற்று வெளியிடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றது.
இது தொடர்பாக வடமாகாண சபை, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், துணுக்காய் பிரதேச செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டும் மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
இந்நிலையில், தமது கிராமத்தின் முதன்மை வீதி சேதமடைந்து போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, இக்கிராமத்தில் வாழ்கின்ற குடும்பங்கள் தெரிவிக்கின்றன.
10 minute ago
14 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago
53 minute ago