2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மணல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

Editorial   / 2020 பெப்ரவரி 23 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - முத்துஐயன்கட்டுகுளத்தின் கீழான பேராற்று பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நால்வரும், இயந்திரங்களுடன் சிறப்பு அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக மக்கள் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, இரண்டு டிப்பர்களிலும், இரண்டு உழவு இயந்திரங்களிலும் மணல் ஏற்றிக்கொண்டிருந்த வேளையில் குறித்த நால்வரையும் கைது செய்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.

இவர்களையும் மணல் ஏற்றும் இயந்திரங்களையும் கைதுசெய்த பொலிஸார், இவர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கியதுடன், இவர்களை 24ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பணித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .