Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 03 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி - இரணைமடுக் குளத்தின் கீழ் நடைபெறுகின்ற தொடர்ச்சியாக நடைபெறுகின்ற மணல் அகழ்வு காரணமாக, இரணைமடுக் குளத்தின் அணைக்கட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக, அப்பகுதி விவசாயிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குளத்தில் இருந்து ஊரியான் வரையான 10 கிலோ மீற்றர் வரையான விவசாய முயற்சிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குடிநீர் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனக் கூட்டங்களிலும் ஆராயப்பட்டுள்ளதுடன், மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பெருமளவு நிதியில் இரணைமடுக் குளம் அபிவிருத்தி செய்யப்பட்டுவரும் நிலையில், குளத்தின் கீழ் நடைபெறுகின்ற பெருமளவிலான மணல் அகழ்வைத் தடைசெய்யாவிட்டால், குளம் உடைப்பெடுக்கக் கூடிய அபாய நிலைமை காணப்படுகின்றது.
குளத்தின் கீழான வயல் நிலங்கள், நீர் வாய்க்கால்கள் என சகல இடங்களிலும் மணல் அகழ்வு நடைபெறுகின்றது.
எனவே, இது குறித்து கிளிநொச்சி மாவட்டச் செயலகம், நீர்ப்பாசனத் திணைக்களம், கமநலச் சேவைகள் அபிவிருத்தித் திணைக்களம் விரைவாக நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடரும் மணல் அகழ்வால், இரணைமடுக் குளத்தின் அணைக்கட்டுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து, விவசாய முயற்சிகளை பாதிப்படையச் செய்யுமென, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025