Niroshini / 2021 டிசெம்பர் 13 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
சட்டவிரோத மதுபான உற்பத்தி விற்பனைகளை, சட்டத்தால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது எனத் தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட மதுவரி அத்தியட்சகர் கிருபாகரன், சமூகத்தின் ஒத்துழைப்பின் மூலமே முற்றுமுழுதாக கட்டுபடுத்த முடியும் எனவும் கூறினார்.
கிளிநொச்சியில், விழுது அமைப்பின் ஏற்பாட்டில், சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், கிளிநொச்சி மாவட்டத்தில், சட்டவிரோத மதுபான உற்பத்தி, விற்பனை என்பன அதிகளவில் காணப்படுகின்றன எனவும் குறிப்பாக, பெண்களும் இவ்வாறான தொழில்களில் ஈடுபடுகின்றனர் எனவும் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, ஒருசில பெண் தலைமைத்துவ குடும்பங்களும், இவ்வாறான சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது எனவும், அவர் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில், இவ்வாறான சட்டவிரோத மதுபான விற்பனை, உற்பத்திகள் தொடர்பில் 22 பெண்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் கூறினார்.
கிளிநொச்சி மாவட்டத்தில், பல சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த அவர், அண்மையில் கூட, கிளிநொச்சி - முட்கொம்பன் பிரதேசத்தில், இவ்வாறான சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு, இந்தச் சட்டங்களை மட்டும் பயன்படுத்தி இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாது எனத் தெரிவித்த அவர், சமூகத்தில் இருந்து வருகின்ற ஒத்துழைப்புகள் மற்றும் விழிப்புணர்வுகள் மூலமே, இந்தச் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த முடியும் எனவும் கூறினார்.
குறிப்பாக, ஒவ்வொரு கிராமங்களிலும் இருக்கின்ற கிராம மட்ட அமைப்புகள், மதப் பெரியார்கள், சமூக ஆர்வலர்களின் ஒத்துழைப்புககள் அவசியமாகும் என்றும், அவர் மேலும் தெரிவித்தார்.
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago