Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 21 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - சாந்தபுரம் கிராமத்தில் சட்டவிரோத மதுபாவனை, போதைப்பொருள் பாவனை என்பவற்றால் 15 வரையான குடும்பங்கள் பிரிந்து வாழ்வதாக, கிராம மட்ட அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
கிளிநொச்சி – கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள சாந்தபுரம் கிராமத்தில் அதிகரித்துக் காணப்பட்ட சட்டவிரோத மதுபாவனை விற்பனைகள் போதைப்பொருள் பயன்பாடுகள் என்பவற்றைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகள் கிராம மட்ட அமைப்புகளின் பங்குபற்றுதலுடன், கிராம அலுவலகம் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சமுர்த்தி அலுவலக உள்ளிட்டோர் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
பொதுமக்கள் மத்தியில் இதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்றும் கடந்த மாதம் இறுதிப் பகுதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறிப்பிட்ட ஒரு சிலரை தவிர இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்ட பலர் அதனை கைவிட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ள கிராமமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், குறித்த கிராமத்தில் இவ்வாறான சட்டவிரோத மதுபாவனைகள் காரணமாக ஏற்பட்ட குடும்ப வன்முறைகள் காரணமாக 15 வரையான குடும்பங்கள் பிரிந்து வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான பெண் தலைமைத்தவ குடும்பங்கள் வருமானங்கள் இன்றியும் தொழில் வாய்ப்புக்கள் இன்றியும் கஷ்டங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
6 hours ago