2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

மன்னார் டிப்போவின் புதிய முகாமையாளர் கடமைகளை பொறுப்பேற்றார்

George   / 2017 மார்ச் 27 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கை  போக்குவரத்து சபையின் மன்னார் டிப்போவின் புதிய முகாமையாளராக நியமிக்கப்பட்ட கணகலிங்கம் காண்டிபன், இன்றுக் காலை 9 மணியளவில் மன்னார், தாழ்வுபாடு பிரதான வீதியில் உள்ள அலுவலகத்தில் வைத்து, தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த டிப்போவுக்கு,  கடந்த 15 வருடங்களின் பின்னர்  தமிழரான, மன்னார் வங்காலை கிராமத்தைச் சேர்ந்த ஏ.ஜே.லெம்பேட் கடந்த 7ஆம் திகதி  நியமிக்கப்பட்டதுடன், அரசியல் அழுத்தங்கள் காரணமாக அவரால் கடமைகளை பொறுப்பேற்க முடியவில்லை. அதனையடுத்து, அவரது நியமனம் இரத்துச் செய்யப்பட்டது.

இந்நிலையில்,  கிளிநொச்சி டிப்போவில் கடமையாற்றிய  கணகலிங்கம் காண்டிபன், மன்னார் டிப்போவின் புதிய முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய முகாமையாளரை டிப்போ பணியாளர்கள் வைபவ ரீதியாக வரவேற்றதுடன், இந்நிகழ்வில் சர்வமத தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இதேவேளை ஏ.ஜே.லெம்பேட், கிளிநொச்சி டிப்போ முகாமையாளராகவும், ஏற்கெனவே மன்னார் டிப்போவில் முகாமையாளராக கடமையாற்றிய முஹமட் சாஹீர், வவுனியா டிப்போ முகாமையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .