2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் ஊடகவியலாளர் மாநாடு.

George   / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார்  தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கடந்த கால வேலைத்திட்டங்கள் தெடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு, வியாழக்கிழமை காலை    மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ரீ.பூலோகராஜா தலைமையில் இடம்பெற்றது.

குறித்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது    தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால்  கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு வேளைத்திட்டங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், குறித்தத்திட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

குறித்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது, மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கணக்காளர் ஐ.சி.ஏ.ஜோன் பொஸ்கோ, இளைஞர் சேவை அதிகாரி ஏ.டியூக்.குறூஸ், மற்றும் இளைஞர் சேவை அதிகாரிகள், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணியாளர்கள் என பலர் பலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .