Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 24 , மு.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், எஸ்.றொசேரியன் லெம்பேட்
'அதிக பலம் ஆற்றல் மற்றும் உற்பத்தித் திறனுக்கு ஆரோக்கியமான உணவுகள்' எனும் தொனிப்பொருளில், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணியகமும் மன்னார் வேள்ட் விஷன் நிறுவனமும் இணைந்து, மன்னார் நகராட்சி மன்ற மண்டபத்தில் போஷாக்கு கண்காட்சியொன்றை நேற்று வெள்ளிக்கிழமை (23) நடத்தின.
இந்நிகழ்வின் போது, மன்னார் நகர பிரதேசத்தில் சுத்தமான உணவுகளை மக்கள் பெற்றுக்கொள்வதற்கும் உணவு விற்பனையாளர்களது விழிப்புணர்வுக்கும் ஒரு பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மன்னார் நகராட்சி மன்ற மண்டபத்தில் கண்காட்சி விழா ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இக்கண்காட்சியில் மன்னார், நானாட்டான், மடு, மாந்தை, முசலி ஆகிய பிரதேச வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தின் மூலமாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தின் பற்சுகாதார மதுபோதைப் பாவனை ஒழிப்பு, பாலியல் தொற்று நோய் தடுப்பு, தாய் சேய் நலப்பிரிவு மற்றும் தொற்றா நோய் தடுப்பு பிரிவுகளிருந்தும் படைப்புக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
11 minute ago
12 minute ago