2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மன்னார் விபத்தில் பாதிரியார் பலி: எண்மர் காயம்

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - தள்ளாடி பிரதான வீதியில், இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தொன்றில், இலங்கை பெந்தகோஸ்து சபையின் பாதிரியார்; ஒருவர் பலியானதோடு மேலும் 8பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கிப் பயணித்த இலங்கை பெந்தகோஸ்து சபைக்குச் சொந்தமான ஹயஸ் ரக வாகனம், மன்னார் - தள்ளாடி பிரதான வீதியில் உள்ள விமானப் படைத்தள பிரதேசத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியே, மேற்படி பாதிரியார் உயிரிழந்துள்ளார்.காயமடைந்தவர்களில், அருட்சகோதரர் ஒருவரும் அருட்சகோதரிகள் அறுவரும் உள்ளடங்குகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X