2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மனித எச்சம் மீட்பு: மூவர் கைது

Editorial   / 2022 ஜனவரி 21 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாவல் காட்டு கிராமத்தில் பாழடைந்த கிணற்றிலிருந்து  30.12.2020 அன்று மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் உயிரிழந்த நபர் தொடர்பிலான விசாரணைகளை முள்ளியளை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி எம்.அன்வர்தீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டனர்.  

இதனையடுத்து, கொலை குற்றவாளிகளாக இனம் காணப்பட்ட சந்தேக நபர்கள் மூவர் நீண்டகாலத்தின் பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இவர்கள் நேற்று (20) கைதுசெய்யப்பட்டுள்ளனர் என முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த நபரின் மனைவி, உயிரிழந்தவரின் நண்பர்கள் இருவர் உள்ளிட்ட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொன்னகர் பகுதியினை சேர்ந்த இருவரும் கேப்பாபிலவினை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X