2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மனித புதைகுழி அகழ்வு மீள ஆரம்பிக்கப்படும்

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 நவம்பர் 16 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள மனித புதைகுழி அகழ்வு பணியானது மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படும் என குறித்த அகழ்வு பணிக்கு பொறுப்பான  சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது கடந்த 12 ஆம் திகதி  எவ்வித அறிவித்தல்களும் இன்றி இடைநிறுத்தி வைக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதிக வேலையின் காரணமாக குறித்த அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை முதல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மீண்டும் பணிகள் எதிர்வரும் 27 ஆம் திகதி காலை வழமைபோல் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த அகழ்வு பணிகளின் போது இதுவரை 235 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 229 மனித எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .