Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2018 நவம்பர் 26 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் நாளை (27) காலை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அகழ்வு பணிகளில் ஈடுபட்டு வரும் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்தார்.
பலத்த மழை காரணமாக இடைநிறுத்தப்பட்ட மன்னார் புதைகுழி அகழ்வுப்பணிகள் நாளை (27) ஆரம்பிக்கப்படவுள்ளன.
பணிகள் இடைநிறுத்தப்படும் வரை 231 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவற்றில் 18 சிறு குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்தார்.
இவ்வாறு மீட்கப்பட்ட அனைத்து மனித எச்சங்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மன்னார் சதொச கட்டட வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் கட்டிட நிர்மாணப் பணிகளுக்காக நிலத்தை தோண்டிய போது இந்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் மே மாதம் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.
இந்த பணிகளில் மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட சட்ட வைத்திய அதிகாரிகள் குழுவினரும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago