2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மன்னாகண்டல் காட்டுப்பகுதியில் கைக்குண்டுகள் மீட்பு

Editorial   / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

புதுக்குடியிருப்பு - ஒட்டுசுட்டான் வீதி, மன்னாகண்டல் காட்டுப் பகுதியில்  இருந்து, 18 கைக்குண்டுகள் சிறப்பு அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மீட்கப்பட்ட கைக்குண்டுகள், போர் காலத்தில் நிலத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்தவையென, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

ஜனவரி 29ஆம் திகதியன்று, கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த சிறப்பு அதிரடிப்படையினர்,  குறித்த கைக்குண்டுகளை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட கைக்குண்டுகள் அனைத்தும், கிளிநொச்சி சிறப்பு அதிரடிப்படையிரின் குண்டு செயலிழக்கும் பிரிவிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .