2025 மே 08, வியாழக்கிழமை

மன்னாரில் 30 வயதை கடந்தோரின் கவனத்துக்கு

Niroshini   / 2021 செப்டெம்பர் 21 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

மன்னார் மாவட்டத்தில், 20 வயதுக்கு மேற்பட்டவர்களுடன் இணைத்து, 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் இதுவரை எவ்வித தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கும், சீனோஃபோம்  தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை, இன்று (21) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாளை (22) காலை 8.30 மணி முதல் 1.30 மணி வரை எழுத்தூர் அன்னை திரேசா அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும், நாளை மறுதினம் (23) காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 1.30 மணி வரை மன்னார் - உயிலங்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மற்றும் மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையிலும், வெள்ளிக்கிழமை (24) காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 1.30 மணி வரை மன்னார் கரிசல் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மற்றும் தலைமன்னார் - கட்டுக்காரன் குடியிருப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும், சனிக்கிழமை (25) காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 1.30 மணி வரை மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையிலும் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் இதுவரை எவ்வித தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என, மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X