2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

மன்னாரில் அதிக விலையில் மணல்

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2017 ஜூலை 12 , பி.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டுள்ளபோதும், வீட்டுத் திட்டத்துக்குத் தேவையான மணல் மண்னை பெற்றுக்கொள்ள, வீட்டுத் திட்ட பயனாளிகள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 28,000 ரூபாய் பெறுமதியான, ஒரு டிப்பர் மணல் மண்னை பெற்றுக்கொள்ள, 35,000 ரூபாய் முதல் 42,000 ரூபாய் வரை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மணல் மண்ணுக்கான அனுமதிப்பத்திரம் ஒரு நாளைக்கு செல்லுபடியாகும் வகையில், மன்னார் பிரதேச செயலகத்தால், மண் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படுகின்றபோதும், தூர இடங்களில் இருந்து மன்னாருக்கு மண் கொண்டு வரப்பட்டு, சேமித்து வைக்கப்பட்டு, அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .