Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2021 நவம்பர் 15 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் - கோந்தை பிட்டி பகுதியில், இன்றைய தினம் (15), இராணுவத்தினரின் உதவியுடன் தகர்க்கப்பட்ட நீர் தாங்கியில் இருந்து, அரியவகை கூகை ஆந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வகை, ஆந்தை இனம் மிக அரிய வகை என்பதுடன், நீண்ட நாள்களாக குறித்த நீர் தாங்கியில் வசித்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்றைய தினம், நீர்த்தாங்கியை குண்டு வைத்து தகர்த்த போது, இறக்கை ஒன்று உடைந்த நிலையில், தாங்கியின் சிதைவுகளில் இருந்து, இந்த ஆந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் நீர் விநியோகத்துக்கென துறைமுகங்கள் அதிகார சபையினால் அமைக்கப்பட்ட குறித்த நீர்த்தாங்கி, மக்களுக்கு அச்சுறுத்தலாக காணப்படுவதாகத் தெரிவித்து, அதனை அகற்றுமாறு அப்பகுதி மக்கள், அதிகாரிகளின் உதவியை நாடினர்.
இதையடுத்து, இன்றைய தினம் காலை 10.30 மணியளவில், தள்ளாடி 54ஆவது படைப்பிரிவு இராணுவத்தின் உதவியுடன், இந்த நீர்த்தாங்கி குண்டு வைத்து தகர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago