2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் இவ்வருடத்தின் 1ஆவது கொரோனா மரணம் பதிவு

Niroshini   / 2022 ஜனவரி 02 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில், நேற்று (1), இவ்வருடத்தின் முதலாவது கொரோனா மரணம் ஒன்று பதிவாகியுள்ளதாகத் தெரிவித்த மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன், மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 35 கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளதாகவும் கூறினார்.

இது தொடர்பாக தொடர்ந்துரைத்த அவர், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவை சேர்ந்த 70 வயதுடைய  முதியவர் ஒருவர், கடந்த 30ஆம் திகதியன்று, மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்றார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவித்த வினோதன், இந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் காரணமாக நேற்று (1) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் எனவும் கூறினார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X