2025 மே 02, வெள்ளிக்கிழமை

மன்னாரில் கண்டனப் போராட்டம்

Niroshini   / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னாரில், அவுஸ்திரேலியா நாட்டைத் தளமாக கொண்ட நிறுவனம் ஒன்று, கனியவள மண் அகழ்வுக்கான ஆய்வினை முடித்து, தற்போது மண் அகழ்வு செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில், மன்னாரின் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் அமைப்பும் இணைந்து மன்னார் நகர பஸ் தரிப்பிடத்துக்கு முன், இன்று காலை 11 மணியளவில் இந்தக் கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கண்டனப்  போராட்டத்தில் சர்வ மத தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கனிய வள மண் அகழ்வுக்கு எதிராக கையெழுத்து பெற்றுக்கொள்ளப்பட்டது. குறித்த கண்டன போராட்டத்தை தொடர்ந்து, ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்கும் வகையில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் வழங்கி வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .