2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மன்னாரில் கவனயீர்ப்பு

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2019 மார்ச் 28 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார வளைவு உடைக்கப்பட்டமையையும், நந்திக்கொடி மிதிக்கப்பட்டதனையும் கண்டித்து இன்று (28) மன்னாரில் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டச் செயலக பிரதான வீதியின் இரு பகுதிகளிலும் பல நூற்றுக்கணக்கான இந்து மக்கள் பல்வேறு வாசகங்களைத்தாங்கிய பதாதைகளையும், நந்திக் கொடியினையும் கையில் ஏந்தியவாறு அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையின் தலைவர் தர்ம குமார குருக்கள் தலைமையில் இடம் பெற்ற குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபையினர், இந்து மத குருக்கள், இந்து மக்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தின் இறுதியில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு சென்று மாவட்ட செயலர் சி.ஏ.மேகன்றாசிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையின் செயலாளரினால் கையளிக்கப்பட்டது.

இதன்போது குறித்த மகஜரை பெற்றுக்கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் குறித்த மகஜரை உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .