2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மன்னாரில் காணி அளவிடும் பணிகள் இடைநிறுத்தம்

Niroshini   / 2021 டிசெம்பர் 13 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தலைமன்னார் மேற்கு பகுதியில், இன்று (13) காலை, வன வளத் திணைக்களத்தினரின் காணி அளவிடும் நடவடிக்கைகளுக்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

மன்னார் – தலைமன்னார் மேற்குப் பகுதியில் வனவளத் திணைக்களத்தினரின் காணி அளவிடும் நடவடிக்கை இன்று (13) காலை இடம்பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது, குறித்த பகுதிக்கு வனவளத் திணைக்களத்தினர் காணிகளை அளவிடுவதற்காக சென்றிருந்தனர்.

இதன்போது அங்கு ஒன்றுகூடிய குறித்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள், கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

குறிப்பாக, காணி அளவிடும் பணிகளை கைவிட்டு அங்கிருந்து செல்ல வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, வன வளத் திணைக்களத்தினருக்கும் தலைமன்னார் பங்குத்தந்தை அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் மற்றும் பொதுமக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

குறித்த கலந்துரையாடலை தொடர்ந்து, வன வளத்திணைக்களத்தினர் காணி அளவீட்டு பணிகளை கைவிட்டு அங்கிருந்து சென்றுள்ளதாக, அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .