2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் டெங்கு ஒழிப்பு வாரம் அமுல்

Niroshini   / 2021 டிசெம்பர் 09 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசரியன் லெம்பேட் 

மன்னார் மாவட்டத்தில், டெங்கு நுளம்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில், இன்று (9)முதல் எதிர்வரும் புதன்கிழமை (15) வரை டெங்கு ஒழிப்பு வாரம் அமுல்படுத்தப்பட்டு
உள்ளது.

இந்த நிலையில், இன்று (9) காலை 8.30 மணியளவில், மன்னார் மாவட்டச் செயலகத்தில், டெங்கு ஒழிப்பு வார ஆரம்ப நிகழ்வு, -மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில் ஆரம்பமானது.


இதன்போது, குழுக்கள் அமைக்கப்பட்டதோடு, பனங்கட்டிக்கொட்டு மற்றும் சின்னக்கடை பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குறித்த குழுவினர் சென்று டெங்கு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

மேலும் பிரதேச செயலகம், உள்ளூராட்சி மன்றங்கள்,பாதுகாப்பு துறையினர், சுகாதார திணைக்களம் மற்றும் சமூக மட்ட அமைப்புகள் இணைந்து சிரமதான முறையிலும், குறிப்பாக, டெங்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள பனங்கட்டுகொட்டு, எமில் நகர்,பெரிய கடை,பேசாலை 5,8ஆம் வட்டாரங்கள், தோட்டவெளி போன்ற கிராமங்கள் உயர் ஆபத்துள்ள இடங்களாக சுகாதார துறையினர் அடையாளப்படுத்தி உள்ளனர்.

குறித்த இடங்களில், எதிர்வரும் ஒரு வாரங்களுக்கு சிரமதானம் மேற்கொள்ளப்பட உள்ளதோடு, அப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு விசேட குழுவினர் சென்று வீடுகள் பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு, டெங்கு நுளம்பைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X