2025 மே 19, திங்கட்கிழமை

மன்னாரில் நாவலர் விழா

Editorial   / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்ட அறநெறிப் பாடசாலைகளின் இணையத்தின் ஏற்பாட்டில் “நாவலர் விழா” இன்று (29) முற்பகல் 9.30 மணியளவில், மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.

மன்னார் மாவட்ட அறநெறிப் பாடசாலைகளின் இணையத்தின் தலைவர் மஹா தர்மகுமார குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி விக்னேஸ்வரி பவனேசன், மன்னார் மாவட்ட மேலதிகச் செயலாளர் எஸ்.குணபாலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, பாடசாலை முன்றலில் இருந்த நாவலர் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, துறைசார் விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X