2025 மே 02, வெள்ளிக்கிழமை

மன்னாருக்குள் ‘வெளி’ நடமாட்டம் கூடியது

Niroshini   / 2020 டிசெம்பர் 30 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

மன்னார் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்ற காரணத்தை அடிப்படையாகக் கொண்டு, வெளி மாவட்டங்களில் இருந்து, மன்னார் மாவட்டத்துக்கு மக்கள் அதிகமாக வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளதென்று, மன்னார் மாவட்டச் செயலாளர் நந்தினி ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.

 

மன்னார் மாவட்டச் செயலகத்தில், நேற்று (29) நடைபெற்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பிலான அவசர கலந்துரையாடலின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், குறிப்பாக பண்டிகைக் காலங்களை முன்னிட்டு, பட்டாசு விற்பனைக்காக வெளி மாவட்டங்களில் இருந்து, வாகனங்களில் மன்னாருக்கு வியாபாரிகள் வருகை தந்துள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளதென்றார்.

அத்துடன், பொருள்களை கொள்வனவு செய்வதற்கு, வர்த்தக நிலையங்களுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கின்றனரெனத்  வங்கிகளின் தன்னியக்க இயந்திரம்(ஏ.ரி.எம்) ஊடாக பணப்பறிமாற்றத்தை மேற்கொள்ளவதற்கும் கூடி நிற்பதை அவதானிக்கின்றோமெனவும் குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில், மக்களுக்கான விழிர்ப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்த அவர், அதனைத் தொடர்ந்து சகல இடங்களிலும் பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம அலுவலகர்கள், வெளிக்கள அலுவலகர்கள் முழுமையாக இறக்கப்பட்டு பரிசோதிக்கப்படுவார்களெனவும் கூறினார்.

இதேவேளை, வியாபார நோக்கத்துக்;காக வெளிமாவட்டங்களுக்குச் சென்று வரும் வாகனங்கள் முருங்கனில் அமைக்கப்பட்டுள்ள கிருமி தொற்றும் நீக்கும் நிலையத்தில் வைத்து, கிருதி தொற்று நீக்கப்பட்டு உரிய அனுமதியுடன் செல்ல அனுமதிக்கப்படுமெனவும், மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

கிறுமிதொற்று நீக்கத்தின் பின்னர், மன்னார் நகருக்குள் வரும் வாகானங்கள், மன்னார் நகரில் உள்ள சோதனைச் சாவடியில் வைத்து மீள் பரிசோதனை செய்யப்பட்டே, மன்னார் நகர பகுதிக்குள் செல்ல அனுமதி வழங்கப்படுமெனவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .