Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 26 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் சதொச மனிதப் புதைக்குழி வழக்கு விசாரணை, எழுத்து மூல சமர்ப்பணத்துக்காக, மார்ச் 5ஆம் திகதி வரை, ஒத்திவைத்து, மன்னார் மாவட்ட நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா, நேற்று (25) உத்தரவிட்டார்.
மன்னார் ‘சதொச’ மனிதப் புதைக்குழி வழக்கு, மன்னார் மாவட்ட நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில், நேற்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, காணாமற்போனோரின் குடும்பங்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல், கண்டுப்பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள், காணாமல் போனவர்களுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே, காணாமற்போனோர் சார்பாக சட்டத்தரணிகள் ஆஜராகி இருப்பதாகத் தெரிவித்தார்.
காணாமற்போனோர் சார்பில், நீதிமன்றத்தில் 13 சத்தியக் கடதாசிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளனவெனத் தெரிவித்த அவர், இந்த மனித எச்சங்கள், 300 வருடங்கள் பழமை வாய்ந்தவை என குறிப்பிடப்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்ளமாட்டோமெனவும் கூறினார்.
இது தொடர்பான மேலதிக அறிக்கைகள், மன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
மன்றின் பாதுகாப்பிலுள்ள சான்றுப்பொருள்கள் முறையான வகையில் பராமரிக்கப்பட வேண்டுமெனவும் சட்டவைத்திய அதிகாரியிடமுள்ள மனித எச்சங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் சாவியை, மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும், அவர் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், சட்ட வைத்திய அதிகாரியிடமுள்ள சான்றுப்பொருள்களை, மன்றில் சமர்ப்பிக்க நீதிமன்றம் கட்டளையிட வேண்டுமென்றும், கே.எஸ்.ரட்ணவேல் வேண்டுகோள் விடுத்தார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago