எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2018 மார்ச் 15 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இணைத்தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கே.கே.மஸ்தான் ஆகியோர் தலைமையில் இன்று (15) மன்னார் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
மன்னார் பிரதேச செயலாளர் மரியதாசன் பரமதாசனின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன், வடமாகாண சபை உறுப்பினர்களான அலிக்கான் சரீப், எஸ்.எம்.ஏ.நியாஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது கடந்த ஆண்டு இடம்பெற்ற மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
அதனைத் தொடந்து கல்வி, மீன்பிடி, சுகாதாரம், விவசாயம், கமத்தொழில், போக்குவரத்து, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற செயற்பாடுகள், இலங்கை போக்குவரத்து சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, மன்னார் பிரதேச சபை, மன்னார் நகர சபை, அரச கால்நடை, இலங்கை மின்சார சபை, தொழிற்துறை திணைக்களம் ஆகிய திணைக்களங்களின் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேலும் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago