2025 மே 22, வியாழக்கிழமை

மன்னார் புதைகுழி தொடர்பாக விசேட கலந்துரையாடல்

Editorial   / 2019 ஜூன் 14 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மனித புதைகுழி தொடர்பாக, நேற்று (13) மன்னார் பொலிஸார்  நகர்தல் பத்திரம் ஒன்றை மன்னார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற குறித்த வழக்கு விசாரணைகளின் போது தொல்லியல் திணைக்களத்தை உள்ளீர்ப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன், மன்னார் மனித புதை குழி தொடர்பான வழக்கு விசாரணை, இம்மாதம் 27ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மன்னார் மனித புதைகுழி தொடர்பான எதிர் கால நடவடிக்கைகள் சம்பந்தமாக தீர்மானங்கள் மேற்கொள்வதற்காக, அன்றைய தினம் (27ஆம் திகதி) விசேட கூட்டம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X