2025 மே 22, வியாழக்கிழமை

மன்னார் மக்களுக்கு அவகாசம்

Editorial   / 2019 மே 10 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேத்தாவாடி  பகுதியில், கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக, பொது மக்கள் விவசாயம் மற்றும் தோட்டச் செய்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2000ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த மக்கள் குறித்த பகுதியில் குடியேறி அதன் பின்னர் அதன் அருகில் உள்ள அரச காணிகளை  துப்புரவு செய்து தோட்டச் செய்கைகளை மேற்கொண்டு பின்னர் நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து சென்று மீண்டும் மீள்குடியேற்றத்தின் பின் மீளக்குடியேற்றப்பட்டனர்.

குறித்த தோட்டக் காணிகளில் வருமானத்துக்காக மிளகாய், தக்காளி உள்ளிட்ட பல்வேறு  பயிரச் செய்கைகளையும் மேற்கொண்டு வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த காணிப் பகுதிக்குள் வனவளத் திணைக்கள அதிகாரிகளால் எல்லைகள் இடப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியில் பயிர்செய்கை மற்றும் தோட்ட செய்கையில் ஈடுபடும் மக்களை இவ்வருடம் செப்டெம்பர்  மாதத்துக்கு முன்னதாக குறித்த பகுதியில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என, வன வள திணைக்கள அதிகாரிகளால் பணிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, தமது வாழ்வாதர தொழில் மற்றும் தாம் காலகாலமாக வாழ்ந்து வந்த குறித்த கிராமத்தை சேர்ந்த மக்கள், தமது காணிகளை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படுவதால் செய்வதறியாது நிற்கின்றனர்.

பாரம்பரியமாக தாங்கள் பயிர் செய்து வாழ்வாதரத்தை தேடும் எமது காணிகளை நிரந்தரமாக தங்களுக்குப் பெற்று தருமாறு தோட்ட செய்கையில் ஈடுபடும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X