Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2018 ஜனவரி 30 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்கள் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (29) மாலை இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட செயலர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய மற்றும், இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், அமைச்சர் றிஸாட் பதியுதீன் ஆகியோரின் தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெற்றது. குறித்த கூட்டத்துக்கு இணைத்தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் சமூகமளிக்கவில்லை.
மேலும் குறித்த கூட்டத்துக்கு வடமாகாண அமைச்சர்களான சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன், விவசாய அமைச்சர் கே.சிவநேசன், மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான பிரிமூஸ் சிறாய்வா, பா.டெனிஸ்வரன், அலிக்கான் சரீப் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, மன்னார் மாவட்டத்தின் கடந்த வருட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் மீள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதோடு, நிறைவடையாத வேலைத்திட்டங்களை பூர்த்தி செய்வது குறித்தும் ஆராயப்பட்டது.
மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
குறிப்பாக, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்கள், மகப்பேற்று வைத்திய நிபுணர் ஆகியோர் இல்லாத நிலை காணப்படுகின்றமை குறித்தும், நிரந்தரமாக அவர்களை நியமிப்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
மேலும் நீர்ப்பாசனம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம், மீன்பிடி, உள்ளிட்ட துறைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளதோடு, மன்னார் மாவட்டத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் வன வள பாதுகாப்பு திணைக்களத்தால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்துக்கு திணைக்கள அதிகாரிகள், இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago