2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மர்மக்கிணறு விவகாரம்: பகுப்பாய்வு அறிக்கை செப். 5இல் சமர்ப்பிப்பு

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

'திருக்கேதீஸ்வரம், மாந்தை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிக்கு சற்று தொலைவில் உள்ள மர்ம கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சகல தடையப்பொருட்களும், பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

அது தொடர்பான பகுப்பாய்வு அறிக்கை கிடைத்தவுடன், மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்' என மன்னார் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் டபிள்யூ.ஆர்.எஸ்.ராஜபக்ஷ, தெரிவித்தார்.
மர்ம கிணற்றில் அகழ்வு பணிகள்;, இன்று வியாழக்கிழமை நிறைவடைந்ததை அடுத்து,  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறுக் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மாந்தை மனித புதைகுழிக்கு சற்று தொலைவில் கண்டு பிடிக்கப்பட்ட மர்ம கிணற்றின் அகழ்வு பணிகள் இன்று காலை 11.40 மணியுடன் நிறைவடைந்துள்ளன.

மன்னார் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எண் B-741/2015 இன் மீதான வழக்கு விசாரணைகள், மன்னார் நீதவான் முன்னிலையில் நடைபெற்றபோது, மன்னார் மாவட்ட விசேட சட்ட வைத்திய அதிகாரி என்ற வகையில் எனது தலைமையில் குறித்த கிணற்றின் அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்தார்.

கடந்த 1ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் நேற்று புதன்கிழமை வரையிலான 3 தினங்கள் குறித்த கிணற்றின் அகழ்வு பணிகள் நடைபெற்று மாலையுடன் முழுமையாக நிறைவடைந்தன. எனினும், கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட மண்ணில் இருந்த தடயங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்ற (4) வியாழக்கிழமை காலை வரை இடம்பெற்றது.

அகழ்வு நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்ட தடையப்பொருட்கள் அனைத்தும் பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டு அதன் அறிக்கை, மன்னார் நீதிமன்றத்தில் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள வழக்கு விசாரணையின்போது சமர்ப்பிக்கப்படும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .