Niroshini / 2021 நவம்பர் 14 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
மருதங்குளம் பகுதியில், மணல் அகழ்வுக்கான அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டு, ஏனைய உரிய முறையில் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்குவதென தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவில் இருந்து, கனிய வளங்களை அகழ்வது தொடர்பில் அனுமதிகளை வழங்குவது தொடர்பான கூட்டமொன்று, துணுக்காய் பிரதேச செயலக மண்டபத்தில், நேற்று (13) மாலை நடைபெற்றது. இதன்போது, மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டது.
மேலும், அனுமதி கோரி உள்ளவர்களுடைய விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தீர்மானங்களும் எடுக்கப்பட்டது. அத்துடன், சுற்றாடலை பாதிக்கும் வகையில் மணல் அகழ்வு மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குவது இல்லை எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை, கூட்டத்தில் கலந்துகொண்ட கிராம சேவையாளர்கள், முறையற்ற விதத்தில் மணல் வியாபாரிகளின் நடவடிக்கைகளால் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் அதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறுனர்.
மேலும், மணலின் விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், கனிய வழங்களை உரிய கட்டுப்கபாடுகளுடன் அகழ்ந்து செல்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
30 minute ago
34 minute ago
47 minute ago
10 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
34 minute ago
47 minute ago
10 Nov 2025