Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 17 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு நகரப் பகுதியில், பரவி வருகின்ற ஒருவகை காய்ச்சல் நோய் காரணமாக கடந்த மூன்று வாரக் காலப்பகுதியில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற ஆய்வுகள் குறித்து உடனடி நடவடிக்கைகளையும், மேலும் இந்நோய் பரவாமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளையும் உடன் எடுக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், அவர் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னக்கு இன்று (17) அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் குறப்பிடப்பட்டுள்ளதாவது,
“வடக்கில் டெங்கு நோயாளர்களது அதிகரிப்பு தொடர்பிலும், மலேரியா நோய் பரப்புகின்ற நுளம்புகளின் பெருக்கம் தொடர்பிலும் நான் ஏற்கெனவே சுகாதார அமைச்சின் அவதானத்துக்குக் கொண்டு வந்துள்ள நிலையில், தற்போது மேற்படி மர்மக் காய்ச்சல், முல்லைத்தீவு மாட்டத்தில் 9 உயிர்களை பலியெடுத்துள்ளதாகத் தெரிய வருகின்றது. சுமார் மூன்று மாத காலப் பகுதிக்குள் 9 பேர் உயிரிழந்தமையானது மிகவும் பாரதூரமான நிலைமையாகவே காணப்படுகின்றது. எனவே, இவ்விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
“உள்ளூராட்சி சபைகளின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகள் இன்மையும், மாகாண சபையின் வினைத்திறன் இன்மையும் காரணமாக, வடக்கு மாகாணத்தில் பல்வேறு நோய்கள் பரவுகின்ற நிலைமையே காணக்கூடியதாக இருக்கின்ற சூழலில், வடக்கின் சுகாதார நிலைமை குறித்து மத்திய அரசாங்கமும் அதிக அவதானமெடுக்க வேண்டியத் தேவை ஏற்பட்டுள்ளது.
“அந்த வகையில், இவ்விடயம் தொடர்பில் உடனடி அவதானமெடுத்து, மேற்படி நோயின் காரணம் கண்டறியப்படவும், இந்நோய் மேலும் பரவாமல் தடுப்பதற்கும், நோய்க்கான மருந்து வகைகள் பற்றாக்குறை அல்லது தேவைகள் இருப்பின், அவற்றை விரைந்து வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
5 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago