சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 ஏப்ரல் 12 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
“முல்லைத்தீவு மல்லாவி வைத்தியசாலையில் சிறுநீரக சிகிச்சைப்பிரிவு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் இயங்கி வருவதாகவும் இதனூடாக உரிய சிகிச்சைகளை பெறமுடியும்” என பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தகவல்கள் தெரிவித்துள்ளன.
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு துணுக்காய் ஆகிய பகுதிகளில் சிறுநீரக நோய்த்தாக்கத்துக்கு உள்ளாகி வருவோரின் தொகை அதிகரித்திருப்பதாகவும் இதனால் பலர் சிறுநீரக பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்பகுதிக்குரிய மல்லாவி ஆதார வைத்தியசாலையில் சிறுநீரக சிகிச்சைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்ட போதும், அது தற்போது உரிய முறையில் இயங்குவதில்லை எனவும் குறித்த வைத்தியசாலையில் புதிதாக நிர்மானிக்கப்பட்;டு வரும் சிறுநீரக சிகிச்சைப்பிரிவுக்கான கட்டுமானப்பணிகள் இதுவரை நிறைவு பெறாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாகவும் சுட்;டிக்காட்டியுள்ள இப்பகுதி மக்கள், வைத்தியசாலையில் சிறுநீரக சிகிச்சைப்பிரிவு இயங்க வைப்பதுக்கு குறித்த சிகிச்சைப்பிரிவுக்கான கட்டுமானப்பணிகளை விரைவாக முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர்.
இது தொடர்பில் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்;டபோது, “சிறுநீரக நோய்க்கான சிகிச்சைகள் மல்லாவி வைத்தியசாலையில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் பொது வைத்திய நிபுணரின் உதவியுடன் நடைபெற்று வருகின்றது.
குறித்த சிகிச்கைப்பிரிவுக்கான கட்டுமானப்பணிகள் இதுவரை பூர்த்தியாகவில்லை. ஒப்பந்தக்காரர்களிடம் கையளிக்கப்பட்டு அதற்கான காலப்பகுதி நிறைவடைந்து ஒன்றரை வருடமாகியும் நிறைவு பெறவில்லை.
இது தொடர்பில் நிதியனுசரணை வழங்கிய மத்திய சுகாதார அமைச்சுக்கு இந்த தகவலை தெரிவித்திருக்கின்றோம். தற்போது மத்திய சுகாதார அமைச்சு ஒரு மாத கால அவகாசத்தை ஒப்பந்தக்காரருக்கு வழங்கியுள்ளனர். அதற்குள் வேலைகள் பூர்த்தியடையாவிட்டால் அதனை நிறுத்தி வேறு ஒப்பந்தக்காரர்களிடம் வழங்கி அதனை நிறைவுறுத்தி தருவதாக தெரிவித்துள்ளனர்” என தெரிவித்தார்.
19 minute ago
30 minute ago
37 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago
37 minute ago
56 minute ago